அன்னை தந்தை பாட்டி தாத்தா
அன்புப் பொங்கச் சிரிப்போம்
அக்கா தங்கைத் தம்பிகள் தம்மை
படித்தச் சிரிப்பை எண்ணி எண்ணி
பண்பாய் மனதுள் சிரிப்போம்
"கடி' ஜோக்கை சொல்ச் சொலிச்
கற்பனைச் செய்து சிரிப்போம் !
முணுமுணுத்துப் பேசுவோரின்
முகம் மலர்ந்திடச் சிரிப்போம்
கடுகடுப்பாகப் பேசுவோரின்
கண்கள் விழிப்புறச் சிரிப்போம் !
நண்பர்களோடு ரகசியம் பேசி
கலகலப்பாகச் சிரிப்போம்
நன்றாய் விளையாட்டில் துன்பம் மறந்து
வியந்து மகிழ்ந்துச் சிரிப்போம் !
சுற்றுப் புறத்தில் நிகழும் சம்பவம்
பார்த்தும் கேட்டும் சிரிப்போம்
சுற்றுலா சென்று இயற்கை ரசித்து
சந்தோஷமாய்த் துள்ளிச் சிரிப்போம் !
சிரிப்பு வந்தால் சிரிப்போம் - ஒன்றாய்ச்
சிரித்து சிரித்து மகிழ்வோம்
சிரிப்பு உடலுக்கு மருந்து - கூடி
சிரித்தால் அனைவருக்கும் விருந்து !
No comments:
Post a Comment